என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாளை சிறை
நீங்கள் தேடியது "பாளை சிறை"
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வள்ளியூர் ஆசிரியர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரை சேர்ந்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த பள்ளியில் நாகர் கோவிலை சேர்ந்த டேவிட் (வயது 52) என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வள்ளியூர் லுத்தா நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் டேவிட்டை கைது செய்தனர்.
பின்னர் அவர் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தை தடுக்க பாளை சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நெல்லை:
பாளை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என்று அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள்.
அதுபோல இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் நெல்லை மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சாம்சன் மேற்பார்வையில் பாளை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் பாளை மத்திய ஜெயிலுக்குள் சென்றனர்.
அங்கு அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். கைதிகள் குளிக்கும் பகுதி, மணல் பாங்கான மைதானம் மற்றும் மரங்கள் பகுதியில் சல்லடை போட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது மத்திய ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து காலை 7 மணி அளவில் போலீசார் சோதனையை முடித்து கொண்டு திரும்பினர்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாளை சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
பாளை மத்திய ஜெயிலில் 1,300-க்கும் அதிகமான தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு முன்பு கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் பல்வேறு பிளாக்குகளாக பிரித்து கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளதா என்றும் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள். அதுபோல இன்று பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவிட்டார்.
துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் பாளை உதவி கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காளியப்பன், தில்லை நாகராஜன் மற்றும் 70-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்திய ஜெயிலுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள்.
7 பிரிவுகளாக பிரிந்து சென்ற அவர்கள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், குளியலறைகள், சமையலறை, மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினார்கள். சந்தேகப்பட்ட தரை பகுதிகளில் தோண்டி பார்த்தும் சோதனை நடந்தது.
போதை பொருட்கள், செல்போன் போன்றவைகள் ஏதேனும் உள்ளதா? என்று சில கைதிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
சோதனையின் போது பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் ஜெயில் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

பாளை சிறையில் இருந்து நேற்று காலையில் மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நெல்லை:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
கடையம்:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி என்ற கவுளிகுமார் (வயது 35). இவருக்கு மேலகுத்தப்பாஞ்சான் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மனைவியின் ஊரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பரிந்துரையில், மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி கலவர வழக்கில் கைதாகி பாளை சிறையில் மர்மமாக இறந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்த பரத்ராஜா (வயது36) என்பவர் தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவர் கடந்த 23-ந் தேதி நடைபெற இருந்த அவரது தம்பி தனசேகரன் திருமணத்துக்காக 7 நாட்கள் பரோலில் வெளி வந்திருந்தார்.
இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலைக் கெதிரான போராட்டத்தில் பரத்ராஜா ஈடுபட்டதாக கூறி 23-ந்தேதி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அங்கு விசாரணை என்கிற பெயரில் பரத்ராஜாவை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பரத் ராஜாவை பாளை சிறையில் அடைத்தனர்.
போலீசார் தாக்கியதில் பரத்ராஜா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 30-ந்தேதி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
பரத்ராஜா சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கேட்டு அவரது உறவினர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று 5-வது நாளாக பரத்ராஜாவின் உடல் வாங்கப்படவில்லை. தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

×

X